கீழக்கரை ஜூன், 25
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் முனைவர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் ஈஷா யோகா மையத்தின் தலைமை பயிற்றுனர் திரு ஞானசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு காணொளி காட்சி மூலம் ஈஷா யோகா மைய ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு ஜெகன் யோகாசனம் குறித்த பயிற்சி அளித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் யோகா பயிற்சியின் முக்கிய அம்சங்களான மூச்சுப் பயிற்சி குறித்தும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் முறை பற்றியும் மூளை மற்றும் தண்டுவட மேம்பாடு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இராமநாதபுரம் ஈஷா யோகா மைய ஒருங்கிணைப்பாளர் ரம்யா மற்றும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பேசிய போது தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும்.மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும் என எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுலைமான், சதாம், முனிய சத்யா மற்றும் உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.