புதுடெல்லி ஜூன், 25
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகையிடம் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு வெளியான பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.