சூடான் ஜூன், 18
சூடான் தலைநகர் கார்டூன் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர். ராணுவத்திற்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே மூன்று மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தெற்கு கார்டூமில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 25 வீடுகள் இடிந்துள்ளதாக கூறப்பட்டது.