வேலூர் ஜூன், 12
வேலூர் அருகே கந்தனேரியில் பாரதிய ஜனதா கட்சி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மேடை அருகே இருந்த பேனர் ஒன்று சரிந்து விழுந்தது. பேனர் அருகே மக்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அங்கு சிறிது பதற்றம் நிலவியது.