சென்னை ஜூன், 12
வரும் 17 ம் தேதி 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை சான்றிதழ் வழங்க உள்ளார். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 6000 பேர் வரை இதில் பங்கேற்க உள்ளதாக இந்த கூட்டம் நடக்கும் பகுதி முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.