வேலூர் மே, 20
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. வெப்பத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று,12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது. இன்னும் வெயில் இயல்பை விட இரண்டு மூன்று டிகிரி அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.