புதுடெல்லி மே, 19
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் திறப்பு விழா மே 28ம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, நரேந்திர மோடியை நேற்று சந்தித்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். பாராளுமன்ற கட்டடம் இந்தியாவின் உணர்வை அடையாளப்படுத்தும் என லோக்சபா செயலகம் நம்புகிறது.