அமெரிக்கா மே, 17
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், மே 24 ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறவுள்ள 3 வது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை முன்பு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது பைடனின் ஆஸ்திரேலியா பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நிலவி வரும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.