துபாய் மே, 11
ஐக்கிய அரபு அமீரக துபாயில் சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், வெற்றிவேல், நாடோடிகள், அயோத்தி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு அறந்தாங்கி நண்பர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பின்போது திரைப்பட டைரக்டர் விருமாண்டி, தவம் திரைப்பட நடிகர் வசி உள்ளிட்டோருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பில் அறந்தங்கியை சேர்ந்த எமிரேட்ஸ் அப்துல்லாஹ், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், டாப்ஸ்டார் குரூப் நிறுவனர் எஸ்ஆர் பைரோஸ், தினகுரல் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, பிரைட் லைட் நிறுவனத்தின் நிறுவனர் ஜலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வரவேற்றனர்.
M. நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.