மதுரை மே, 6
சித்திரை திருவிழாவில் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். கூட்ட நெரிசல், வழிப்பறி கும்பலின் தாக்குதல் போன்றவற்றால் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எம்.கே புரத்தைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ், விளாச்சேரியை சேர்ந்த சிறுவன் பிரேம்குமார், திருநகர் பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.