மதுரை மே, 2
மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன் தினம் நடந்தது. இந்நிலையில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் பத்துடன் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன ஐயாயிரம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.