நாகர்கோவில் ஆகஸ்ட், 15
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்த ஆட்சியர் அரவிந்த்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் வரவேற்றார். இதை தொடர்ந்து ஆட்சியர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இதை தொடர்ந்து காவலர் அணிவகுப்பு மரியாதை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். மூவர்ண கலரிலான பலூனை பறக்க விட்டார். புறாக்களும் பறக்க விடப்பட்டது. பின்னர் போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாண வர்களின் மரியாதையை ஏற்று கொண்டார்.