திருவண்ணாமலை ஆகஸ்ட், 16
செய்யாறு தாலுகா தேத்துறை ஊராட்சியில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 100 நாள் வேலை திட்டம் மூலம் புதிய குளம் அமைக்கப்பட்டு இருந்தது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக புதிய குளம் பயன்பாட்டுக்கு விடும் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி குளத்துக்கு வெளியே கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ஹரி ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இவ்விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் வேளாங்கண்ணி, நம்பி, துணைத் தலைவர் தயாளன், ஊராட்சி செயலாளர் குமரவேலு, பணித்தள பொறுப்பாளர் சுஜாதா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.