சென்னை மே, 3
தமிழகத்தில் பால் நுகர்வு தேவையை உணர்ந்து உற்பத்தியை பெருக்க ரெண்டு லட்சம் ஜெர்சி இன மாடுகளை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரூ.70 ஆயிரம் வரையிலான மாடுகளை கூட்டுறவு பால் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளிடம் வழங்க உள்ளது. அதன் மூலம் பால் உற்பத்தியை உயர்த்தி தட்டுப்பாட்டை போக்க ஆவின் திட்டமிட்டுள்ளது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.