சென்னை மே, 1
சென்னையில் 19 கிலோ வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி ரூ.2192.50 ஆக இருந்த வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 ரூபாய் குறைந்து ரூ.2,021.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.1118.50 ஆக தொடர்கிறது.