கீழக்கரை ஏப்ரல், 30
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா ஆர்ட்ஸ் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நேற்று(29.04.2023) மாலை 5.30 மணிக்கு சதக் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் P.R.L.A.ஹாமீது இப்ராகிம் முன்னிலையில் கல்லூரி முதல்வர் டாக்டர். A.A.சதக்கத்துல்லா வரவேற்று ஆண்டறிக்கை வாசிக்க அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.G.ரவி பட்டமளிப்பு பேருரையாற்றினார்.
அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் கற்ற கல்வியின் மேன்மையையும்,முக்கியத்துவத்தையும் உணர்ந்து சமூக சிந்தனையுடன் கூடிய அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டுமென்றார்.
மேலும் நமது தாய் மொழியாம் தமிழ்,தமிழ் பண்பாடு,தமிழ் கலாச்சாரம் ஆகியவை மென்மேலும் சிறப்படைய பட்டம் பெற்ற மாணவ மாணவியர் அயராது பாடுபட வேண்டுமெனெ வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் முகம்மது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் திட்ட அலுவலர் டாக்டர் விஜயக்குமார், கல்லூரி பேராசிரியர்கள், அனைத்து மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர் சதக்கத்துல்லா பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க மாணவ மாணவியர் அனைவரும் அதனை பின்மொழிந்தனர்.
இவ்விழாவில் 926 இளங்கலை மாணவ மாணவியருக்கும் 70 முதுகலை மாணவ மாணவியருக்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பட்டமளிப்பு விழா சிறக்கவும் பட்டம் பெறும் மாணவ மாணவியர் எதிர்காலம் சிறக்கவும் முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் S.M. முகம்மது யூசுப், அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் செயலர் ஜனாபா S.M.H.ஷர்மிளா ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.