ராமநாதபுரம் ஏப்ரல்,30
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மாணவி லியான தாஹா. ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் கலைபண்பாட்டு பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் முகவை முத்துக்கள் 2023 என்ற தலைப்பில் விளையாட்டு மற்றும் கலாச்சார சந்திப்பு ராமநாதபுரம் எம்.ஜி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இச்சிலம்பம் போட்டியில் கலந்துகொண்ட கீழக்கரையை சேர்ந்த மாணவி லியானா தாஹா 3ம் பரிசு பெற்று அனைவரிடமும் வாழ்த்துக்களை பெற்றார்.
மேலும் வெற்றிபெற்ற மனைவிக்கு ராமநாதபுர மன்னர் சேதுபதி வாரிசான மன்னர் நாகேந்திர சேதுபதி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்த மாணவி ராமநாதபுரம் ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் மாஸ்டர் ஹேமநாதன் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.