சென்னை ஏப்ரல், 29
வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கூறி கடையில் வாங்கிய கோப்பையை பாகிஸ்தானில் வீழ்த்தி வாங்கிய கோப்பை என முதல்வர் ஸ்டாலினையே வினோத் பாபு என்பவர் ஏமாற்றியுள்ளார். முதல்வர், உதயநிதியிடம் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதன் பின் உளவுத்துறை நடத்திய விசாரணையில் அவர் கூறியது அனைத்தும் பொய் என தெரிய வந்தது அடுத்து, தற்போது வழக்குப் பாய்ந்துள்ளது.