கீழக்கரை ஏப்ரல், 27
ரம்ஜான் பெருநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மணல்மேடு திருவிழா கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
வடக்குத்தெரு, கொந்தன்கருணை அப்பா தர்ஹா திடல், கிழக்குத்தெரு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், கடற்கரை நியூ பீச் பார்க் போன்ற பெருநாள் திடலில் சிறுவர் முதல் பெரியோர் வரைக்குமான பொழுதுபோக்கு அம்சமாக ராட்டினங்கள், நொறுக்கு தீவன கடைகள் இடம் பெற்றன.
மேலும் பெருநாள் கொண்டாட்டத்தின் நிறைவு நாளான(26.04.2023)நேற்று கீழக்கரை நியூ பீச் பார்க்கில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பரிசு கூப்பன் குலுக்கல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விழா ஒருங்கிணைப்பாளர் சேகுகருணை தலைமையில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E உமர்,தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணை தலைவர் மஹசூக்பானு, கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள் சர்ஃப்ராஸ் நவாஸ், சக்கினா பேகம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
இதில் முதல் பரிசாக ஏழாயிரம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளை செ.நெ.தெருவை சேர்ந்த மாணவர் நிஃப்ராஸ் தட்டி சென்றார். மற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு டேபிள் ஃபேன், வரவேற்பு மேஜை, டீ ஃபாய் மேஜை,நாற்காலிகள்,சில்வர் வாளி,ஸ்கூல் பேக் போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாதவாறு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிசந்திரனுக்கு சால்வை அணிவித்து விழா குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.
விழா ஒருங்கிணைப்பாளர்களாக ஹம்ரூன், நிஸ்டார் அலி, செல்வ கணேஷ் பிரபு, செய்யது சாதிக், ஜமால்,ஆஷிப், பயாஸ், ஷாஹித், அப்துல்ரஹ்மான், நாச்சியா சவுண்ட் சர்வீஸ் அகமது ஜலாலுதீன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.