கிருஷ்ணகிரி ஏப்ரல், 26
தக்காளி விலை ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுவதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த மூன்று டன் தக்காளியை ஆற்றில் கொட்டியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் ஐந்துக்கு தக்காளியை விற்றால் அதன் மூலம் அறுவடை செய்யப்பட்ட பணம் கூட வராது என வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது இந்த செயல் பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.