விழுப்புரம் ஏப்ரல், 26
கள ஆய்வில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார். ஆய்வுகளுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் பேசுகிறார். இந்த பயணத்தின் போது டிஜிபி தலைமைச் செயலாளர் மற்றும் 60 ஐஏஎஸ் அதிகாரிகள் உடன் இருப்பர்.