சூடான் ஏப்ரல், 25
சூடானிலிருந்து 500 இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வர தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையேயான உள்நாட்டு போரானது கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நீண்டு வருகிறது. இதனால் அங்கு சிக்கி இருக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 500 பேர் துறைமுகத்தில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.