சென்னை ஏப்ரல், 24
கடந்த மூன்று நாட்களாக நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 71 வயதாகும் அவர் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் செயல் இழந்ததால் மொத்த உடலிலும் விஷம் ஏறியிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.