சென்னை ஏப், 22
இன்று நாடு முழுவதும் அக்ஷய திருதியை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. தங்கத்தின் முதலீடாக கருதுபவர்கள் நகைகளுக்கு பதிலாக தங்கு நாணயங்களை வாங்கலாம். ஏனெனில் சேதாரம், செய்கூலி குறைவு இதனால் அதனை விற்கும்போதும் அதிக மதிப்பு கிடைக்கும். தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் இன்று காலை 7:49க்கு தொடங்கி ஏப்ரல் 23 காலை 5 48க்கு முடிவடைகிறது.