வாஷிங்டன் ஆகஸ்ட், 15
இந்தியா விடுதலை அடைந்ததன் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் இன்று நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.