புதுச்சேரி ஏப்ரல், 21
புதுச்சேரியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அனைத்து பள்ளிகளுக்கும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 9 ம் வகுப்பு மாணவர்கள் 35 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பட்டியலை மே 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.