சூரத் ஏப்ரல், 21
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தேசத்திடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க இப்போதும் நேரம் இருக்கிறது. பிரதமரை விமர்சிக்கும் வகையில் ஓபிசி மக்களை காங்கிரஸ்காரர்கள் வேண்டுமென்றே அவமதித்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.