துபாய் ஏப்ரல், 21
ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாட்டில் நடைபெறும் இத்தார் நிகழ்ச்சிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற வண்ணம் உள்ளார்கள். 19ம் தேதி இப்தார் நிகழ்விற்கு மக்கள் ஆர்ஜே சாரா அபுதாபி அய்மான் சங்க பைத்துல் மால் தலைவர் சாகுல் ஹமீது, அய்மான் சங்க பொதுச் செயலாளர் அப்பாஸ், நிர்வாகிகள் நிஜாம், காயல் அன்சாரி, தமிழ் குடில் மகாதேவன், ஷார்ஜா ராஜா ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி, மன்னர் மன்னன் ஊடகவியலாளர் ரியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுப்பற்றி மக்கள் RJ சாரா கூறும்போது…
“46 ஆண்டுகளை கடந்து மனிதநேய சமூக சேவையாற்றிவரும் துபாய் தமிழ் சமூக அமைப்பான ஈமான் அமைப்பின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து நாட்டு மக்களும் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து உறவுகளையும் ஒரே இடத்தில் பார்ப்பது நம் சொந்த ஊரில் இருப்பதுபோன்று ஒரு உணர்வு ஏற்படுகின்றது. இந்த ஒரு அறிய வாய்ப்பினை ஏற்படுத்திய துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் பொதுச்செயலாளர் ஹமீத் யாசின் மற்றும் அத்தனை நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினால் அது மிகையாகாது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எல்லா மக்களும் தோளோடு தோள் சேர்த்து நோன்பு திறந்து தொழுக கூடிய வாய்பினை கொடுத்த இறைவனுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்
இதனைத் தொடர்ந்து வந்திருந்த பிரமுகர்களை ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் சிறப்பு மாணவன் காமில் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.