சென்னை ஏப்ரல், 20
கமல்ஹாசனின் ‘234’ வது படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். நாயகன் படத்தை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி சேர்வதால், படத்தை தரமாக எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க திரிஷாவிடம் கால்ஷீட் இல்லாததால் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர் ஓகே சொன்னால் கமல் நயன்தாரா சேர்ந்து நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.