நெல்லை ஆகஸ்ட், 14
நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வளாராக ராபின் ஞானசிங் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2021-22 ம் ஆண்டு காவல்துறையில் மெச்ச தகுந்த பணிக்காக ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்த இவர் கடந்த 1999ம் ஆண்டு காவல் துறையில் துணை ஆய்வாளராக பணியில் சேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு, லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றினார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். தற்போது நெல்லை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த 2015 ம் ஆண்டு தமிழக அரசின் அண்ணா பதக்கம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது