மலேஷியா ஏப்ரல், 17
நடிகர் மாதவனின் மகன் கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் ஐந்து தங்கப்பதக்கங்கள் என்று அசத்தியுள்ளார். மலேசியா சாம்பியன்ஷிப் என்ற அந்த தொடரில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் வேதாந்த் தங்கம் வென்றுள்ளார். இவரது இந்த சாதனை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.