Spread the love

நெல்லை ஆகஸ்ட், 14

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலா தலங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக இப்பகுதியை விட்டு வெளியேறி நகர்பகுதியில் சென்று படித்து வருகின்றனர்.

இந்த பகுதி அடர் வனப்பகுதி என்பதால் இங்கு 2 ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி இப்பகுதி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் தினமும் செல்போனில் பேசி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாஞ்சோலையை அடுத்த நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் அமைந்துள்ள தொலைதொடர்பு டவர் (பி.எஸ்.என்.எல்.) பழுதடைந்துள்ளதால் இப்பகுதிகளில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியே சொல்லமுடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சமீபத்தில் தொழிலாளி ஒருவர் இறந்துவிட்டார். அதனைக்கூட அவரது மகனுக்கு தெரிவிக்க செல்போனில் தொடர்புகொள்ள முடியவில்லை . உடனடியாக தொலை தொடர்பு சேவையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *