புதுடெல்லி ஏப்ரல், 14
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (ssc)நடத்தும் தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதோடு மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 7500 காலி பணியிடங்களுக்கான எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் மே 4 கடைசி தேதி ஆகும் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்