மயிலாடுதுறை ஆகஸ்ட், 14
சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவாலி ஊராட்சியில் தலைவர் தாமரை செல்வி திருமாறன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இணைந்து வீடு வீடாக சென்று மக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினர்.
இதேபோல் காவிரி பூம்பட்டினம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பூம்புகார் மீனவர் காலனி, புது குப்பம், நெய்தவாசல் மற்றும் கீழையூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று தேசிய கொடியை வழங்கினர்.