தருமபுரி ஏப்ரல், 10
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சந்திரா கூட்டரங்கில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து வருகிற 15-ம் தேதி தருமபுரியில் மாபெரும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது, இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்வது. தொடர்ந்து வருகிற 25 முதல் 28-ம் தேதி வரை சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டங்கள் நடத்துவது, அதானி விவகாரத்தில் பிரதமருக்கு போஸ்டு கார்டு அனுப்பும் போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு திருமணங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தீத்தராமன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், சண்முகம், ஜெயசங்கர், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பிற்பட்டோர் அணி தலைவர் நவீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.