கீழக்கரை ஏப்ரல், 10
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் அதிகாலை முதல் இரவு நேர துவக்கம் வரை உண்ணாமல்,பருகாமல் நோன்பு என்னும் விரதம் இருப்போருக்கு நோன்பு திறப்பதற்கான பழங்கள், குளிர்பானங்கள்,பலகாரங்கள்,நோன்பு கஞ்சி என வகை வகையான உணவு பொருட்களை கொண்டு ஓரிடத்தில் அனைவரையும் அமர வைத்து நோன்பு திறக்க செய்யும் நிகழ்வுகளுக்கு இஃப்தார் என்று அழைக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் இஃப்தார் நிகழ்வுகள் தினமும் நடந்து வருகின்றன. மின்ஹாஜ் பள்ளி ஜமாத் பள்ளிவாசலில் இளைஞர்களால் தினமும் நடத்தப்படும் இஃப்தார் விருந்தோம்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நோன்பு திறப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் ஒரு பகுதியாக நேற்று விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) சார்பாக இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரையில் நகர் தலைவர் முபினா தலைமையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஸி,சமூக ஆர்வலர் அஜிஹர் காக்கா, தில்லையேந்தல் பஞ்சாயத்து துணை தலைவி மர்சுக்கா பானு அவர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை 18 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சக்கீனா பேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் பொதுமக்களிடையே உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மௌலவி ஜஹாங்கீர் அரூஸி பிரார்த்தனையோடு இஃப்தார் நிகழ்ச்சி ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை SDPI கீழக்கரை நகர செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இறுதியாக கீழக்கரை நகர துணைத் தலைவர் ரீகான் நன்றி உரையுடன் இனிதே இஃப்தார் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.