துபாய் ஏப்ரல், 10
ஐக்கிய அரபு அமீரக துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒகளூர் சிரஞ்சீவி ஆலோசனைப்படி, இன்று துபாயில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமீரக பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அழகாபுரம் தங்கதுரை, பெரும்பாண்டி செல்வராசு, மகேஷ் காமராஜ், மாளிகைக்கோட்டம் செல்வராசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமால் கேவிஎல், தேமுதிக துணைசெயலர்கள் சிவகுமார், கலைச்செல்வம், கள்ளக்குறிச்சி சின்னா, தமிழ் தேசிய வார நாளிதழான வணக்கம் பாரதம் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகி ஹாஜா அலாவுதீன், நைனா யாஸ்மின், இயாஸ் பாஷா கரீம் கலைச்செல்வன், முருகன், மதிமுக அமீரக நிர்வாகி துரை, அதிமுக சரவணன், திமுக கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அமீரகவாசிகள் உள்ளிட்ட அதிகமானோர் கலந்து கொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.