கோவை ஏப்ரல், 9
நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து வந்தே பாரத் ரயில் குறித்து பேசி உள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், 2016 ம் ஆண்டு சீனா சென்றிருந்தபோது புல்லட் ரயிலில் பயணித்தேன். அப்போது என் மனதில் ஒரு பெரிய ஏக்கம் இருந்தது நம்நாடு எப்போது இந்த மாதிரியான ரயில்களை கொடுக்கும் என்று அந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. என கூறினார்.