சென்னை ஏப்ரல், 8
பள்ளியில் 3ம் வகுப்பிலிருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். 2ம் வகுப்பு வரை தேர்வு நடத்தக்கூடாது என தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் குழந்தைகளின் கற்றல் திறமையை சோதிக்க பல வழிகள் இருக்கலாம். ஆனால் ஒரே கற்றல் முறையில் தான் பல விதமான மதிப்பீட்டு முறையை வடிவமைக்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அது குழந்தைகளுக்கு பாரமாக இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.