சென்னை ஏப்ரல், 8
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் ஏப்ரல் 11 ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்அரசு, அன்பில் மகேஷ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.