சென்னை ஏப்ரல், 7
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை நடித்து இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் இப்படம் ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து உருவாக்கி வருவதாக கூறி இப்படத்திற்கு தடை கேட்டு ராஜகணபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விஜய் ஆண்டனி ஏப்ரல் 12க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.