கீழக்கரை ஏப்ரல், 3
கீழக்கரையில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரின் பிரதான சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நடைபாதைகளை ஆக்கிரமித்து வருகின்றன.
6வது வார்டுக்குட்பட்ட கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா சாலையில் கடந்த சில நாட்களாக இந்த சாக்கடை கழிவு நீர் குளம் போல் காட்சி தருவது பற்றி கீழக்கரை மக்கள் உரிமை குரல் வாட்சப் தளத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு தீர்வு எட்டப்பட்டதா?என மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
லட்சக்கணக்கில் செலவழித்து வாறுகால் பைப் பதித்தும் சாக்கடை நீர் வெளியேறுவதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஒப்பந்ததாரரின் கவனக்குறைவா? அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காததா? என்றெல்லாம் மக்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஹைராத்துல் ஜலாலியா துவக்கப்பள்ளி,மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.இதன் மூலம் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது?
நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியமென்பதை வணக்கம் பாரதம் இதழ் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.