அமெரிக்கா ஏப்ரல், 2
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளியில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அர்கான்ஸாஸ், மிஸ்ஸிப்பி, அலபாமா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.