மும்பை மார்ச், 31
ஹால்மார்க் உடன் 6இலக்க HUID உள்ள தங்க நகைகள் மட்டுமே ஏப்ரல் 1 முதல் விற்க அனுமதி வழங்கப்படும் என ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஆறு இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும் BIS அமைப்பின் BISCARE APP ல் அந்த ஆறு இலக்க எண்ணை பதிவிட்டு நகை விபரத்தை அறியலாம். எனினும் 2 கிராமிற்கு குறைவான எடை கொண்ட நகைகளுக்கு புதிய விதிமுறை கட்டாயம் இல்லை என்றார்