நெல்லை மார்ச், 29
நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. அதோடு புகார் குறித்து மாநில ஆணையத்தின் விசாரணை பிரிவு தலைமை இயக்குனர் 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.