இத்தாலி மார்ச், 27
ஆப்பிரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். அப்படி நாட்டில் இருந்து வெளியேறும் அவர்கள் படகுகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இத்தாலிக்கு செல்ல முயன்ற போது படகு கவிழ்ந்ததில் 28 பேர் உயிரிழந்ததாகவும் 58 பேரை காணவில்லை என கடலோர காவல்துறையினர் தெரிவித்தனர்.