சென்னை மார்ச், 26
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கு இந்த ஆண்டுக்கான டான்செட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதல் ‘சீட்டா’ எனப்படும் இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு 4961 பேர் விண்ணப்பித்திருந்தனர் இந்த தேர்வு இன்று நடைபெற உள்ளது.