சென்னை மார்ச், 26
தமிழகத்தில் இன்றைய காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து பூஜ்ஜியம் என்ற அளவிற்கு வந்துவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசிய அவர், இன்ஃப்ளுயன்சாவின் தாக்கம் குறைந்தாலும் உருமாறிய ஓமிக்ரான் XBB BA4 தாக்கம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். நாளொன்றுக்கு 80 பேர் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.