Spread the love

காஞ்சிபுரம் மார்ச், 21

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023 மார்ச் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24 ம்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

ஆகவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13-வது தவணை தொகையை பெறும் பொருட்டு அனைவரும் பி.எம். கிசான் கணக்கை புதுப்பிக்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடவும், நேரடி பயன் பரிமாற்றம் வசதி தங்களது வங்கி கணக்கில் செயல்பாட்டில் உள்ளதா என உறுதி செய்திடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *