ராமநாதபுரம் மார்ச், 21
ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சாலை விபத்தில் பாதித்த ஐந்து குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தலா ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வருவாய் துறை மூலம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சேக் மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.